வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் முகமது நியாஸ் சிபி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரிடர் நிவாரணத்துக்கு உடனடியாக 219 கோடி ரூபாய் தேவை என்று மாநில அரசு வாதிட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட 677 கோடி ரூபாயின் உண்மையான நிலை குறித்து அரசாங்கம் அறியவில்லை எனவும் கூறப்பட்டது.
677 கோடி ரூபாய்க்கு தெளிவான கணக்குகள் இல்லாத போது கூடுதலாக எப்படி 219 கோடி ரூபாய் கேட்க முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எனவே விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.