இந்தியாவின் முன்னணி பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபிபீம் அவென்யூஸ், Rediff.com இல் 54% பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது.
$3 மில்லியன் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம், 28 வருட பழமையான இணைய சேவை நிறுவனத்தில் நடக்கும் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
முன்னதாக, Rediff.com 1996இல் ஐஐஎம் கொல்கத்தா முன்னாள் மாணவரான அஜித் பாலகிருஷ்ணனால் நிறுவப்பட்டது. அப்போது அசுர வளர்ச்சி கண்ட Rediff.com, 2000இல் அமெரிக்காவின் NASDAQ’இல் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய இணைய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
அதன் உச்சத்தில், இது NASDAQ பங்குச் சந்தையில் $600 மில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டது. இருப்பினும், 2000கள் மற்றும் 2010களில் வேகமாக மாறிய டிஜிட்டல் சூறாவளியில் சிக்கி சவால்களை எதிர்கொண்டது.