சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் 125 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே வார நாட்களில் 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 125 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
இதன் காரணமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.