இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.51 பில்லியன் டாலர் அதிகரித்து 658.091 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட தரவு காட்டுகிறது.
முந்தைய அறிக்கை வாரத்தில் மொத்த கையிருப்பு $1.31 பில்லியன் குறைந்து $656.582 பில்லியனாக இருந்தது மற்றும் அதற்கு முந்தைய வாரத்தில் $17.761 பில்லியனாக சரிவை கண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் பிற்பகுதியில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவு 704.885 பில்லியன் டாலர்களை எட்டியது.
இருப்பினும், அடுத்தடுத்த வாரங்களில் ஒரு சரிவு போக்கு காணப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மீண்டும் கையிருப்பு அதிகரித்துள்ளது.