சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான யெஸ்மேடம், நிறுவனத்தில் மேற்கொண்ட சர்வேயில் கணிசமான மன அழுத்தத்தை வெளிப்படுத்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்பட்ட பின்னர் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
நிறுவனத்தின் மனிதவளத் துறையின் மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் எனக் கூறப்படும் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்தது.
அந்த மின்னஞ்சலின் படி, நிறுவனம் தனது ஊழியர்களிடையே பணியிட அழுத்த அளவை அளவிடுவதற்கு சர்வே ஒன்றை நடத்தியுள்ளது.
இருப்பினும், சர்வேயில் எழுப்பப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பதாகப் புகாரளித்தவர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்தது.
வேலையில் யாரும் மன அழுத்தத்தில் இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.