பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத் செல்கிறார். இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
குவைத்துக்கு கடைசியாக 1981ல் அப்போது பிரதமாக இருந்த இந்திரா காந்தி சென்றிருந்த நிலையில், அதன் பிறகு தற்போது நரேந்திர மோடி செல்கிறார்.
இதுதொடர்பான வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த பயணம் இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும், அவை வரலாற்று மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன.