பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கவும் பொருளாதார ரீதியான உறவை மேம்படுத்தவும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குவைத் செல்கிறார். அதன்படி இன்று அரசு முறை பயணமாக 2 நாட்களுக்கு குவைத் செல்கிறார்.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
அதன் பிறகு குவைத்தில் வாழும் இந்திய தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடமும் பேச உள்ளார். மேலும் கடந்த 43 வருடங்களில் முதல் முறையாக குவைத் நாட்டிற்கு செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.