சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி அதிகாலை 4 மணியளவில் இஸ்லாமாபாத்தில் அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், பாகிஸ்தான் விமானப்படையின் நூர் கான் (சக்லாலா, ராவல்பிண்டி), முரித் (சக்வால்) மற்றும் ரஃபிகி (ஜாங் மாவட்டத்தில் ஷோர்கோட்) விமானப்படை தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவின் சில ஏவுகணைகள் பாகிஸ்தானின் உள்ள பஞ்சாபையும் தாக்கியதாகவும், சில ஆப்கானிஸ்தானுக்குள் சென்றதாகவும் ஷெரீப் கூறினார்.
மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
