புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு… சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு.!

Estimated read time 0 min read

சென்னை: 2024ம் ஆண்டு நாளையுடன் முடிவடைந்து 2025ம் ஆண்டு பிறக்க தயாராக உள்ளது. அதன்படி, ஆங்கில புத்தாண்டு நாளை நாளிரவு கொண்டாடப்படவிருக்கிறது.

இந்த நிலையில், பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும், முன் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விரிவான அறிவிப்பை வெளிட்டுள்ளார்.

அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பாதுகாப்பு பணியில் 19,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்குகள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு:

  • புத்தாண்டை ஒட்டி சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • நாளை (டிச.31) இரவு 9 மணியிலிருந்து 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள ஏற்பாடு.
  • மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, பைக் ரேஸ் நடக்காமல் தடுக்க 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
  • டிச.31 மாலை முதல் ஜன.1 வரை கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Please follow and like us:

You May Also Like

More From Author