அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் மரணம் அடைந்தது குறித்து சீனா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் டிசம்பர் 30ஆம் நாள் தெரிவித்தார்.
முன்னாள் அரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர், சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதை முன்னேற்றினார்.
சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கிடையிலான நட்பார்ந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கும் அவர் முக்கிய பங்காற்றினார் என்றும் மாவ்நிங் தெரிவித்தார்.