நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க(ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர், அனைவரும் சகோதரத்துவ உணர்வோடு இணைந்து செயல்படும் போது நாடு மேலும் உயரும் என்றார்.
இந்திய மக்களின் பலம் எல்லையற்றது. இந்த வலிமை உயரும் போது அது பல அற்புதங்களை செய்கிறது. இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறோம். சகோதரத்துவ உணர்வுடன் கட்டுப்படும் போதுதான் சாதிக்க முடியும்.
நம் நாட்டில் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மரபு உள்ளது.அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து அரசியல் சட்டத்தை பின்பற்றும் போது நாடு மேலும் உயரும் என்று பகவத் கூறினார்.