தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

Estimated read time 0 min read

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். திருவிழா போல நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஏராளமான மக்களும் வருகை தருவார்கள்.

நேற்று முன் தினம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்து முடிந்தது. நேற்றைய தினம் பால மேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்தது. இன்று (ஜனவரி 16) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், டிராக்டர், இருசக்கர வாகனம், ஆட்டோ, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியை இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், சற்று தாமதாம் ஏற்பட்டது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் போட்டியில் களமிறங்கும் மாடுபிடி வீரர்கள் களத்தில் உறுதிமொழி ஏற்றனர். துணை முதலமைச்சரின் வருகையையொட்டி வாடிவாசல் பின்புறப் பகுதியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பொது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பநிதியுடன் ஜல்லிக்கட்டு மேடைக்கு வருகை தந்து பச்சை நிற கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author