ஜனவரி 25ஆம் நாள் நடைபெற்ற சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட விருந்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்சு அரசுத்தலைவர் மாக்ரனும் காணொளி மூலம் உரை நிகழ்த்தினர்.
அப்போது எதிர்காலத்தில் சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து, ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார். மாக்ரனும் உரை நிகழ்த்திய போது, இருநாட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்து, உலக அமைதி மற்றும் நிதானத்துக்குத் துணைபுரியும் கூட்டாளி உறவை கூட்டாக உருவாக்குவதற்கு இரு தரப்பும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதில் இரு தலைவர்கள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளதை இது காட்டுகிறது.
சீனாவும் பிரான்ஸும் இருதரப்புறவை உறுதியாக வளர்த்து, மக்களிடையேயான தொடர்பை விரிவாக்கி, சமத்துவம் மற்றும் ஒழுங்கு முறையிலான உலக பலதுருவமயமாக்கத்துக்கு பிரச்சாரம் செய்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதில் ஊன்றிநிற்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
இந்த 4 முன்மொழிவுகள் இருநாட்டு பொது நலன்களுடன் இணைந்து மேலும் பெரிய பொறுப்பு ஏற்பதன் அடிப்படையில் உருவாக்கப்ப்ட்டன என்று கூறலாம்.கொந்தளிப்பான உலகில் சீனாவும் பிரான்ஸும் இணைந்து உலக நிர்வாகத்தின் சிக்கலான நிலைமையைத் தீர்த்து, உலகளவில் நிதானமாக்கி மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.