சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி வசூலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை சீனா கடுமையாக எதிர்க்கிறது, இதற்கு சட்டப்பூர்வமாக பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பிப்ரவரி 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறும்போது, அமெரிக்கா ஃபென்டானில் பிரச்சினையை சாக்குப்போக்காக கொண்டு, சீனா தயாரிப்புகளின் மீது கூடுதல் வரி விதிக்கிறது.
உலகளவில், போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைகளை மிகக் கண்டிப்பாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் நாடுகளில் சீனாவும் ஒன்று. ஃபெண்டானில் அமெரிக்காவிற்கு ஒரு பிரச்சினை என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா தனது சொந்த ஃபெண்டானில் பிரச்சினையை நியாயமான வழியில் தீர்க்க வேண்டும். கூடுதல் வரி வசூலிப்பு மூலம் அமெரிக்கா அடிக்கடி மற்ற நாடுகளை அச்சுறுத்த கூடாது என்று தெரிவித்தார்.