2024ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் நிலைமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்குகளை நிறைவேற்றியுள்ள நிலைமை பற்றிய அறிக்கை, 27ஆம் நாள் பரிசீலனைக்கான சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 15வது கூட்டத்தொடருக்கு ஒப்படைக்கப்பட்டது. இவ்வறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் சீனாவின் உயிரினச்சுற்றுச் சூழல் தரம் தொடர்ந்து மேம்பட்டுள்ளது.
சீனத் தேசியளவில் காற்றுத் தரம் குறிப்பிட்ட தர வரையறையை எட்டியுள்ள நகரங்களின் எண்ணிக்கை 222 ஆகும். இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 19 நகரங்களாக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டில், சீனாவின் உயிரினச்சுற்றுச் சூழல் தர மேம்பாட்டு இலக்குகள் திட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சீன சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் குவாங் ரென் ச்சியூ தெரிவித்தார்.