சீனாவின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக் செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்த நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் சீக் ஏஐ செயலிகளை அலுவலக கணினிகளில் பதிவிறக்கம் செய்வதால், ரகசிய தகவல் கசியும் அபாயம் ஏற்பட்டது. இதனால் நிதியமைச்சக ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் சாட்ஜிபிடி, டீப் சீக் ஏஐ செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது என அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், மத்திய அரசின் முடிவால் வர்த்தகம் அரசியலாக்கப்படுவதாக கூறியுள்ளார்.