இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டுவர கூடிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அதன்படி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள பதிவில்,
பிரதமர் மோடி உடனான சந்திப்பு மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.