ஆஸ்திரேலியாவின் சுதந்திரமான அறிஞர் மௌரீன் ஏ ஹூபெல் அம்மையார் அண்மையில் இணைய வன்முறையால் தாக்கப்பட்டுள்ளார். அவரது சுட்டுரை பக்கமும் மூடப்பட்டது.
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உண்மையான நிலைமை பற்றிய அவரது ஆய்வுகள், இதற்கு காரணமாகும்.
சின்ஜியாங்கில் இன ஒழிப்பு இருப்பது போன்றவற்றை மேலை நாடுகளின் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பரவல் செய்து வருகின்றன. ஆனால் இந்த கூற்றுகளின் மீது ஹூபெல் சந்தேகம் கொண்டுள்ளார். சின்ஜியாங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு உயர்வேகமாக அதிகரித்து வருவதோடு மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது என அவர் தெரிந்து கொண்டுள்ளார். உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளும் விதம், அவர் சுட்டுரை பக்கத்தைத் திறந்து வைத்தார். ஆனால், சீனா பற்றிய ஆக்கப்பூர்வத் தகவல்களை வெளியிட்ட அவர் விரைவில் நியாயமற்ற முறையில் குறைகூறப்பட்டார்.
பேட்டி அளித்த போது அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு குடும்பதினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சின்ஜியாங்கில் பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வேன். கடந்த சில ஆண்டுகளில், சீனா செல்வமடைந்து வருகிறது. பொது மக்கள் நாட்டின் வளர்ச்சியிலிருந்து நலன் பெற்றுள்ளனர். சின்ஜியாங்கும் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. இச்சாதனைகள் எப்படி நனவாக்கப்பட்டுள்ளன? சீனாவில் வறுமை ஒழிப்புப் பணியின் வெற்றிக்கு காரணம் என்ன? முதலியவற்றை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அவரது பார்வையில், உலக ஒழுங்கு மேண்லாமைக்குச் சீனா பங்காற்றும். பல்வேறு நாடுகள் இதிலிருந்து பயனடைய முடியும்.
பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு வருகின்ற அமெரிக்காவுக்கு மாறாக, கூட்டு வளர்ச்சியானது, சீனாவின் கொள்கையாகும் என்று அவர் தெரிவித்தார்.