இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது எல் ஐ கே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடலுக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் லிப் சிங்க் செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.