சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இத்தொழில்துறைகளுள் மின்னணு, வாகனம், மின்சார இயங்திரங்கள் முதலிய துறைகளின் முன்னேற்றப் பங்கு அதிகம்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கான தொழில்துறையின் பங்களிப்பு விகிதம் 36.3 விழுக்காட்டை எட்டியுள்ளது. இத்துறை மீது அரசு சாரா முதலீடு பத்து விழுக்காட்டும் மேலாக உயர்ந்துள்ளது. அதோடு, பி.எம்.ஐ குறியீடும் தொடர்ந்து 2 திங்கள்காலமாக விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.