சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றி வருகின்ற “பிரதேச ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டம்” ——ஷி ச்சின்பிங் சிந்தனையின் ஆற்றல்01

நவீனமயமாக்கக் கட்டுமானத்தை முன்னேற்றுவதில், பிரதேச ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டத்தைச் சீனா செயல்படுத்தி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனைக்கான நடைமுறை இதுவாகும்.

பிரதேச ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கான காரணம்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் பல்வேறு பிரதேசங்களுக்கிடையிலான வளர்ச்சியில் பெரும் இடைவெளி உள்ளது. இத்தகைய இடைவெளியைக் குறைத்து, வளர்ச்சிச் சாதனைகளை நியாயமான முறையில் பொது மக்களுக்கு வழங்குவது, இந்த நெடுநோக்குத் திட்டத்தின் இலக்காகும்.

பிரதேச ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கான வழிமுறைகள்
சீனா நாட்டின் மேலாண்மையில், இணக்கம் மற்றும் ஒத்துழைப்பு முக்கிய அம்சங்களாகும். அதனால், பல்வேறு பிரதேசங்கள் மூலவளங்களை ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கூட்டாகக் கட்டுப்படுத்தி, வளர்ச்சிச் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன. இதன் மூலம் பல்வேறு பிரதேசங்கள் உயர்தர வளர்ச்சியை நனவாக்கியுள்ளன.

பிரதேச ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கான மாதிரிகள்
முதலில், சீனாவின் பெய்ஜிங், தியான்ஜிங், ஹேபெய் ஆகிய பிரதேசங்களின் கூட்டு வளர்ச்சியைப் பார்ப்போம். சீனாவின் “சிலிக்கான் பள்ளத்தாக்கு”என்று அழைக்கப்படுகின்ற பெய்ஜிங் ட்சொங்குவான்சுன் பகுதியின் புத்தாக்கத் திட்டப்பணி, தியான்ஜிங் மாநகரின் பின்ஹைய் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பெய்ஜிங்கில் புத்தாக்கம், தியான்ஜிங்கில் மனமாற்றம், ஹேபெய்யில் தயாரிப்பு ஆகிய மேம்பாடுகளைக் கொண்ட வளர்ச்சி முறை தொடங்கியது. மேலும், அதிவிரைவு தொடர் வண்டிகள், இந்த மூன்று பிரதேசங்களுக்கிடையிலான பயண நேரத்தைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைக்கு வசதியளித்துள்ளன.
தவிரவும், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அனுபவங்கள், மத்திய பகுதியிலுள்ள உற்பத்தி திறன், மேற்கு பகுதியிலுள்ள மூலவளங்கள் ஆகியவையும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கூட்டுச் செழுமையுடைய நவீனமயமாக்கத்திலிருந்து சீன மக்கள் அனைவரும் நலன் பெற்று வருகின்றனர்.
