நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் நிதி துறை தொடர்பான தரவுகளை சீன மத்திய வங்கி ஏப்ரல் 13ம் நாள் வெளியிட்டுள்ளது.
முதல் காலாண்டில், நாடளவில் வழங்கப்பட்ட ரென்மின்பி கடன் தொகை, 9.78 இலட்சம் கோடி யுவானை அதிகரித்தது. இதில், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, 8.66 இலட்சம் கோடி யுவானை அதிகரித்தது என்று அந்த தரவுகள் காட்டுகின்றன.
மார்ச் இறுதியில், ரென்மின்பி கடனின் இருப்புத் தொகை, 265.41 இலட்சம் யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.4 விழுக்காடு அதிகரித்தது. தவிரவும், ரென்மின்பியின் வைப்பு தொகை, 12.99 இலட்சம் கோடி யுவானை அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே நாள் வெளியிடப்பட்ட சமூக நிதி திரட்டல் தரவுகளின்படி, மார்ச் இறுதியில், நிதி அமைப்பு முறையிலிருந்து பெற்ற முதலீட்டின் இருப்புத் தொகை, 422.96 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்:VCG