விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது.
சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள பல லட்சம் மதிப்பிலான வெடிபொருள்கள் அனைத்தும் வெடித்து சிதறி குடோன் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த குடோன் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடோன் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததால் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.