இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: 7ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Estimated read time 0 min read

விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.

இப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேருவதற்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதஸ்வரம், தவில், தேவாரம் பிரிவுகளில் சேருவதற்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முடிந்ததும், அரசு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்டும். வேலைவாய்ப்பில் பதிவு செய்யலாம். ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.400 வழங்கப்படும். இலவச பேருந்து சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சலுகை, இலவச பாடப்புத்தகம் மற்றும் அரசு விதிக்கு உட்பட்ட சலுகைகள் வழங்கப்படும். தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டு திடல், விழுப்புரம் என்ற முகவரியில் விண்ணப் பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94444 55750, 82205 65676 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author