இலங்கைத் தேர்தல் ஆணையம் 7ஆம் நாள் வெளியிட்ட நாடு தழுவிய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கையின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 266 இடங்களில் மிக அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 43 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளது. 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் உட்பட 339 உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய 8,287 உறுப்பினர்களில் 3927 இடங்களில் வென்றுள்ளது.
இலங்கையில் நீண்ட காலமாக தாமதமாகி வந்த நாடு தழுவிய உள்ளாட்சித் தேர்தல், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.