கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கரூர் துயரச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்சித் தொண்டர்கள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தமிழக வெற்றிக்காகக் கழகத்தின் (த.வெ.க.) பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில், “கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் நினைவாக, இந்த ஆண்டுக்கான தீபாவளி விழாவை எங்கள் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
