2025ஆம் ஆண்டு சீனாவுக்கான புரிந்துணர்வு சர்வதேச கூட்டம் நவம்பர் 30ஆம் முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை சீனாவின் குவாங்ச்சோ நகரில் நடைபெறுகின்றது.
புதிய முறைமை, புதிய வளர்ச்சி, புதிய தேர்வு——சீன பாணியுடைய நவீனமயமாக்கம் மற்றும் உலக நிர்வாகத்தின் புதிய அமைப்பு என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். டிசம்பர் முதல் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்திய பரப்புரை அமைச்சருமான லீ ஷுலெய் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
சில ஆண்டுகாலமாக, சீனாவுக்கான புரிந்துணர்வு சர்தவசே கூட்டம், சீனாவை அறிந்து கொள்ளும் மிக முக்கிய மேடைகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர். சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தை அறிந்துகொள்வது, சீனாவை அறிந்து கொள்வதன் முக்கிய அம்சமாகும் என்று சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில், அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உலக பல்வேறு நாடுகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் நவீனமயமாக்கத்தைக் கூட்டாக நனவாக்குவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
