சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 9ஆம் நாளில், கெய்ரோவில், அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் அஹ்மத் அபல் ஹெய்டுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில்,
சீனாவும் அரபு நாடுகளும் நட்பார்ந்த நாடுகளாகவும் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. தற்போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டலில், இரு தரப்புறவு வரலாற்றில் மிக சிறந்த காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது. நெடுநோக்கு பார்வையில், அரபு நாடுகளுடன் உறவை சீனா கையாண்டு வளர்த்து வருகிறது. அரபு நாடுகளின் நியாயமான இலட்சியத்திற்கு சீனா ஆதரவளித்து வருகிறது.
நெடுநோக்கு தற்சார்பை வலுப்படுத்தி, ஒற்றுமையை மேம்படுத்தி, சொந்த நாடுகளின் நிலைமைக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்க சீனா ஆதரவளிக்கிறது. நவீனமயமாக்கத்தை கையோடு கை கோர்த்து விரைவுபடுத்தி, மேலும் உயர் தர சீன-அரபு மனித குலத்தின் எதிர்கால பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.