மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கை வெளியிடப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான சர்வதேச ஆய்வுக் கூட்டத்தின் துவக்க நிகழ்வில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 5ஆம் நாள் முக்கிய உரை நிகழ்த்தினார்.
மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கும் பணியை எப்போதுமே முக்கிய இடத்தில் வைத்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு, மனித உரிமைகளுக்கான பொதுவான கொள்கையை நாட்டின் உண்மையான நிலைமையுடன் ஒன்றிணைப்பதில் நிலைத்து நின்று செயல்பட்டு வருகிறது.
மனித உரிமைகளின் வளர்ச்சிக்கு சீனா தெரிவு செய்த பாதை சீனாவின் தேசிய நிலைமைக்கும் பொது மக்களின் விருப்பத்துக்கும் பொருத்தமானது. இதனை சீனா உறுதியுடன் முன்னேற்றும் என்று வாங் யீ குறிப்பிட்டார்.
மேலும், உலகளாவிய மனித உரிமை மேலாண்மையில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கையை நடைமுறைப்படுத்தி, அமைதி, வளர்ச்சி, சமத்துவம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவைக் கொண்ட மனிதகுலத்தின் பொது விழுமியங்களை சீனா முன்னெடுத்துச் சென்று, உலக மனித உரிமைகள் துறையில் மேலும் பெரும் வளர்ச்சியை முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.