போடு செம…!! தீ வெர்ஷன்… “தக்லைப் படத்தின் முத்தமுழை பாடல் வெளியீடு”… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!! 

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் தற்போது தக்லைப் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிம்பு, நடிகைகள் திரிஷா மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 5-ம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முத்தமழை பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தீ பாடி இருந்த நிலையில் தீ வெர்ஷனில் பாடல் வெளியாகியுள்ளது. முன்னதாக இசை வெளியீட்டு விழாவின்போது சின்மயி பாடிய நிலையில் தீ மற்றும் சின்மயி ரசிகர்கள் போட்டி போட்டனர்.

ஆனால் படத்தில் முத்தமழை பாடல் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது படத்தின் பாடல் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் திரிஷா இடம்பெற்றுள்ள இந்த பாடலின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author