உலக பொருளாதார மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் ஸ்வீட்சுலாந்தின் தாவோஸ் நகரில் 20 முதல் 24ஆம் நாள் வரை, நடைபெற்றது.
உலகப் பொருளாதாரத்தை விவாதிக்கும் முக்கிய மேடையான தாவோஸ் மன்றம், உலகப் பொருளாதாரத்தின் திசைக்காட்டியாக என்றழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டு கூட்டம் நுண்ணறிவு காலத்தின் ஒத்துழைப்பு எனும் தலைப்பில் நடைபெற்றது.
சகிப்பு தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்தை கூட்டாக முன்னேற்றுவது, உலக பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து ஆற்றலை உருவாக்குவது, உண்மையான பலதரப்புவாதத்தை கூட்டாக பேணிக்காத்து நடைமுறைப்படுத்துவது, கால நிலை மாற்றத்தைக் கூட்டாகச் சமாளிப்பது ஆகியவற்றை சீனா முன்மொழிந்தது. புதுப்பிப்பு, ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்பு, பகிர்வு ஆகிய கருத்துகளை இம்முன்மொழிவுகள் வெளிக்காட்டின. நுண்ணறிவு காலத்திலுள்ள ஒத்துழைப்புடன், புதுப்பிப்பு நெருக்கமாக இணைக்கின்றது. புதிய உயர் தர உற்பத்தி திறனை வளர்ப்பதன் மூலம், உலக அறிவியல் தொழில் நுட்ப சீர்திருத்தம் மற்றும் பசுமை வளர்ச்சியின் முன்னிலையில் சீனா உள்ளது. இதன் மூலம், சீனா, பல்வேறு நாடுகளுடன் நலன்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.