ஆகஸ்ட் மாதத்தில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் காரணமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 16-ம் தேதி (சனி) மற்றும் ஆகஸ்ட் 17-ம் தேதி (ஞாயிறு) ஆகிய இரு நாட்களும் வார இறுதி விடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறையிலும் பணிபுரிபவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இத்துடன், இந்த விடுமுறைகளை பயன்படுத்திக் கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிடும் பொதுமக்கள் ஏற்கனவே ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டுள்ளனர்.