கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

Estimated read time 1 min read

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா உறுதிப்படுத்தியுள்ளனர்.

மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3 டி முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது. கொந்தகையில் கிடைத்த இரு மண்டை ஓடுகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், இந்த முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. மேலும், இது 80% அறிவியல், 20% கலையை பயன்படுத்தி இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு குறித்து இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபேஸ் லேப்பின் இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் “முக தசை அமைப்பை மீண்டும் உருவாக்கவும், உடற்கூறியல் மற்றும் மானுடவியல் தரநிலைகளைப் பின்பற்றி முக அம்சங்களை மதிப்பிடவும் கணினி உதவியுடன் கூடிய 3D முக மறுசீரமைப்பு முறையைப் பயன்படுத்தினோம்” என்று கூறினார்.

அதுமட்டும் இல்லாமல், அகழ்வாராய்ச்சி இடத்திலிருந்து 800 மீ தொலைவில் உள்ள கொண்டகை என்ற புதைகுழியில் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மரபியல் அடிப்படையில் வம்சாவளியைக் கண்டறிய மேலும் டிஎன்ஏ ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author