செனகல் தலைமையமைச்சர் உஸ்மானே சோன்கோ, அண்மையில் சீனாவில் நடைபெற்ற கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் பங்கேற்க, சீனாவிற்கு வருகை தந்தார். இப்பயணத்தின்போது, ஹாங்சோ, தியான்ஜின், பெய்ஜிங் ஆகிய இடங்களுக்குச் சென்று, எண்ணியல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, நுண்ணறிவு சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சீனா அடைந்துள்ள சாதனைகள் பற்றி அறிந்து கொண்டார். இது குறித்து, அவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சீனா, செனகலின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாகும். சீனாவின் முதலீட்டாளர்கள் ஆக்கப்பூர்வமான மனப்பாங்கு மற்றும் உயிராற்றலை கொள்கின்றனர். இரு நாட்டு ஒத்துழைப்புகளின் மூலம், மேற்கு ஆப்பிரிக்கா கூடவே முழு ஆப்பிரிக்காவிலுள்ள சீனாவின் முக்கிய ஒத்துழைப்புப் பிரதிநிதியாக செனகல் விளங்குவது, நமது இலக்காகும் என்றார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றத்துடன், இரு நாட்டு ஒத்துழைப்புகள், வேளாண் பொருட்களின் வர்த்தகம், அடிப்படை கட்டுமானம் ஆகியவற்றிலிருந்து, புதிய எரியாற்றல், எண்ணியல் அடிப்படை கட்டுமானம் முதலிய துறைகளாக விரிவாக்கப்பட்டுள்ளது. இரு நாட்டுறவின் வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், ஒத்த கோட்பாடு மற்றும் விழுமியத்தின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட இரு நாட்டுறவானது, இரு நாட்டு ஒத்துழைப்புக்கான அடிப்படையாகும். மேலும், சர்வதேச விஷயங்களிலுள்ள பல முக்கிய பிரச்சினைகளில், இரு நாடுகள் ஒத்த நிலைப்பாடு கொண்டுள்ளன. பலதரப்பு அமைப்புமுறையில், இரு தரப்பும் நெருங்கிய ஒத்துழைப்புகளையும் மேற்கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில், இரு நாடுகள் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, செழுமையான சாதனைகளைக் கொண்ட கூட்டாளி உறவை ஆழமாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.