பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகரமாக பாஜக மாற்றிவிட்டது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!! 

Estimated read time 1 min read

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கோபால் கெம்கா என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபர் ஆன இவரை கடந்த 4-ம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை வெளிப்படையாக சுட்டுக்கொன்ற சம்பவம் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகரமாக மாற்றியது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் இன்று கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. குற்றம் இங்கே புதிய வழக்கமாக மாறிவிட்டது. அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது. பீகாரின் சகோதர சகோதரிகளே இந்த அநீதியை இனி பொறுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்துக்கும் பொறுப்பேற்க முடியாது.

ஒவ்வொரு கொலையும், கொள்ளையும், தோட்டாவும் மாற்றத்திற்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீகார் மாநிலமாக மாறுவதற்கான நேரம். தற்போது அங்கு முன்னேற்றம் இல்லை, பயமில்லை. இந்த முறை நீங்கள் செலுத்தும் வாக்கு அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்லாமல் பீகாரை காப்பாற்றுவதற்கும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author