அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய வரி, அமெரிக்காவிற்குள் நுழையும் கனேடிய பொருட்களுக்கு பொருந்தும்.
மேலும் இது “கனடாவின் பழிவாங்கல்” மற்றும் தற்போதைய வர்த்தக தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என டிரம்ப் கூறினார்.
இது தவிர மற்ற வர்த்தக நாடுகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்த அமெரிக்கா
