இவ்வாண்டு சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாகும்.
14ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் சீனாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய இலட்சியம் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. தடுப்புப் பணியை முக்கியமாக கொண்ட சீனா, உலகளவில் மிக பெரியளவான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு முறையையும் மிக பெரிய மருத்துவ சேவை அமைப்பு முறையையும் கட்டியமைத்துள்ளது. சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவையின் திறன், வினியோகம், சமநிலைதன்மை ஆகியவை தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்துள்ளன.
2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் மருத்துவ மற்றும் சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 57 இலட்சத்து 80 ஆயிரத்தை எட்டியது. மருத்துவ சேவை தரம் உயர்ந்து வருகின்றது. கடந்த 5 ஆண்டுகளில், சீன பொது மக்களின் முக்கிய ஆரோக்கிய குறியீடு தெளிவாக மேம்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் சீன மக்களின் சராசரி ஆயுள் காலம், 79 வயது ஆகும். இது 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.1 வயது அதிகம்.