நம்பிக்கையோடும், தொடர்ந்து முயற்சிப்பவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன்
பள்ளியில் 4 மாதங்களில் வெளியேற்றப்பட்டார். ‘முக்கியமற்றவர்’ என்ற தன்னம்பிக்கையிழக்கும் வார்த்தைக்கு எதிராக, உலகத்தை ஒளியூட்டிய மின்விளக்கை உருவாக்கினார்!
சார்ல்ஸ் டார்வின்
“உனக்கு சிந்தனை இல்லை” என்ற தந்தையின் விமர்சனத்துக்கு பதிலாக, பரிணாமவியலை கொண்டு உயிரியல் துறையையே புரட்டிப் போட்டார்.
வோல்ட் டிஸ்னி
புதுமை இல்லை என தூக்கிக்காணப்பட்டவர், பின்னர் குழந்தைகளின் கனவுலகைக் கட்டியெழுப்பிய தந்தையாக உயர்ந்தார்.
பீட்டோவன்
“இசைத் திறமையற்றவர்” என்றாலும், இசை நாதத்தில் நிலைக்கக்கூடிய அற்புதங்களை ஏற்படுத்தினார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நான்கு வயது வரை பேசத் தெரியாதவன் என ஆசிரியரால் புறக்கணிக்கப்பட்டவர், ஆனால் யாராலும் மறுக்க முடியாத அறிவியல் புரட்சி வீரர் ஆனார்.
ஆகஸ்ட் ரோடின்
மூன்று முறை கலைப் பள்ளியில் தோல்வி. ஆனால் இன்று உலகின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவர்.
மோசார்ட்
இசையில் அதிகமான குறிப்புகள் என விமர்சிக்கப்பட்டவர், இப்போது இசையின் அழிவற்ற பெயரெழுத்து.
மெண்டலீவ்
சராசரி மாணவர்; ஆனால் வேதியியலை அமைத்துத் தந்த சீரமைப்பாளர்தான்.
ஹென்றி ஃபோர்ட்
தொடக்கத்தில் தோல்வியுற்ற தொழிலதிபர், பின்னர் உலகெங்கும் அவரது மோட்டார் வண்டியின் சக்கரங்களைச் சுழறச் செய்தார்.
தோல்வி என்பது முடிவு அல்ல. அது ஒரு புது தொடக்கம். நீங்கள் இப்போது சிரமத்தில் இருக்கலாம், குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம்.
ஆனால் உங்களிடம் நம்பிக்கை, நேர்மை, முயற்சி இருந்தால், உலகத்தை மாற்றும் ஒரு கதையின் நாயகனாகவோ நாயகியாகவோ மாற முடியும்!
இன்று நாம் யாரையும் தோல்வியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யக்கூடாது. உங்களது குழந்தைகளையும் மாணவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். ஒரு தருணத்தில் தோற்றாலும், முழு வாழ்க்கையை வென்றெடுக்கலாம்!
– நன்றி முகநூல் பதிவு