சீனாவின் பன்நோக்க முப்பரிமான போக்குவரத்து இணையத்தின் முக்கிய கட்டமைப்பு, அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஜுலை 21ம் நாள் நடைபெற்ற சீன அரசவை தகவல் தொடர்பு பணியகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் லியு வேய் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், உலகளவில் மிக பெரிய உயர்வேக ரயில் இணையம், உயர்வேக நெடுஞ்சாலை இணையம், தூதஞ்சல் இணையம் ஆகியவற்றை சீனா கட்டியமைத்துள்ளது. இவற்றில், இயக்கத்திலுள்ள உயர்வேக ரயிலின் நீளம், 48 ஆயிரம் கிலோமீட்டரை எட்டி, உலகின் உயர்வேக ரயிலின் மொத்த நீளத்தில் 70 விழுக்காட்டுக்கு மேல் வகிக்கிறது. அடுத்த கட்டத்தில், தேசிய பொருளாதார சுழற்சி, பொது மக்களின் பயண வசதி ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், போக்குவரத்து துறை அமைச்சகம் தொடர்ந்து சில முக்கிய பணித்திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது என்று தெரிவித்தார்.
படம்:VCG