ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்திற்கான தியன்ச்சின் அறிக்கை வெளியீடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்திற்கான தியன்ச்சின் அறிக்கை கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 2026ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகால வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டத்திற்க்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு, பொருளாதாரம், மனிதப் பண்பாட்டு ஒத்துழைப்பு முதலியவற்றை வலுப்படுத்துவது தொடர்பான 24 சாதனை ஆவணங்களும் இதே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.