மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

Estimated read time 0 min read

மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் எனப் பன்முகத் திறன் பெற்றவராகவும் விளங்கி வந்த கலாபவன் நவாஸ், படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்தார்.

வெகு நேரமாக அறையை நவாஸ் திறக்காததால், விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கலாபவன் நவாஸை, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author