ஈரானில் நடைபெற்ற ஐ.டி.எப் டென்னிஸ் தொடரின் இந்தியாவின் கரண் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் லோபனோ மோதினர். ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், கரண் சிங் 7 க்கு 6, 6 க்கு 2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.