காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, போலியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், கர்நாடக வாக்காளர் பட்டியலைக் காட்டி தனது கருத்தை உறுதிப்படுத்தி குற்றம் சாட்டினார்.
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் ” பயங்கர் சோரி ” (பெரும் வாக்குத் திருட்டு) நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் “வாக்கு திருட்டு” நடைபெற்றுள்ளதாக என்று ராகுல் கூறினார்.
கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
