முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான 25வது சீன சர்வதேசப் பொருட்காட்சி செப்டம்பர் 11ஆம் நாள் நிறைவு பெற்றது. நடப்புப் பொருட்காட்சியில், 64 ஆயிரத்து 400 கோடி யுவான் மதிப்புள்ள 1154 திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டுள்ளன. உலகளவில் முதலீடு மற்றும் வணிகத்துக்கான சிறந்த தேர்வாக சீனா எப்போதும் திகழ்கிறது என்று நாடு கடந்த தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பலர் தெரிவித்தனர்.
பிரைஸ் வேட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தைச் சேர்ந்த சீனப் பொது விவகாரத் தலைமை இயக்குநர் சோசிங் கூறுகையில், இவ்வாண்டு நாடு கடந்த தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சீனாவில் முதலீட்டை உயர்த்தும் அல்லது நிலைநிறுத்தும் என 90 விழுக்காட்டான தொழில் நிறுவனங்கள் தெரிவித்தன. சீனாவிலுள்ள புத்தாக்க உயிரினச் சூழல், தனது தொழில் நிறுவனங்களின் போட்டி ஆற்றலை முன்னேற்ற உதவும் என 57 விழுக்காட்டான தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
பிரிட்டன்-சீன வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் சசூன் கூறுகையில், நடப்புப் பொருட்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாக, பிரிட்டனின் 100 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 300க்கும் மேலான பிரதிநிதிகள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்தனர். சீனச் சந்தையின் மீதான பிரிட்டன் தொழில் நிறுவனங்களின் பெரும் ஆர்வத்தை இது காட்டியுள்ளது என்று தெரிவித்தார்.