பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைத் தாண்டி, 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.
இக்கூட்டணியில், தனித்துப் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 71-ல் பாஜக முன்னிலை பெற்று அதன் செல்வாக்கை நிரூபித்துள்ளது. இத்துடன், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
மாறாக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தல் பெரும் பின்னடைவை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 10-ல் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இது அக்கட்சியின் மோசமான செயல்பாடு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால், பிகாரில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
