ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

Estimated read time 1 min read

இலங்கை – ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள்  வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இலங்கை அணி தொடரை வென்றது. இந்நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டி20 போட்டி நேற்று ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் அணைத்து விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 7 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர் என 67 ரன்களை எடுத்தார். சதீரா சமரவிக்ரமா 25 ரன்களும், தனஞ்சய டி சில்வா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மதீஷா பதிரானா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக, ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக இப்ராஹிம் சத்ரான் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ரகமனுல்லா குர்பாஸ் 67, குல்பதின் நைப் 16, ஓமர்சாய் 2, முகமது நபி 9, நஜிபுல்லா ஜாட்ரான் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 86/5 என திணறிய ஆப்கானிஸ்தானுக்கு மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக  விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரான் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த கரீம் ஜானத் 20, காய்ஸ் அஹமத் 7, நூர் அகமது 9 நவீன்-உல்-ஹல் 1 ரன்களில் அவுட்டாகி தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தினர்.

இருப்பினும் எதிர்புறம் தொடர்ந்து இப்ராஹிம் போராடியதால் வெற்றியை நெருங்கிய ஆப்கானிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டாலும் 1 விக்கெட் மட்டுமே கையில் இருந்தது. பினுரா பெர்னாண்டோ வீசிய அந்த ஓவரில் எதிர்ப்புறமிருந்த ஃபரூக்கிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என்பதால் அனைத்து 6 பந்துகளையும் தாமே எதிர்கொள்ளும் பரிதாப முடிவை கேப்டன் இப்ராஹீம் எடுத்தார்.

ஆனால் அதில் முதல் 4 பந்துகளில் கடினமாக போராடியும் ரன்கள் எடுக்க தவறிய அவர் 5வது பந்தில் 2 ரன்களும் கடைசி பந்தில் பௌண்டரீயும் அடித்தார். அதனால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்களுக்கு 156 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மதிஷா பதிரானா 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனால் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த மதிஷா பதிரானாவுக்கு வழங்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author