சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2025ஆம் ஆண்டின் மார்ச் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 3 இலட்சத்து 24 ஆயிரத்து 70 கோடி அமெரிக்க டாலராகும்.
இது கடந்த பிப்ரவரி இறுதியில் இருந்ததை விட 1340 கோடி அமெரிக்க டாலர் அதிகம். அதிகரிப்பு விகிதம் 0.42 விழுக்காடாகும்.
சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை தொடர்ந்து 16 மாதங்களாக 3 இலட்சத்து 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் நிலையில் உள்ளது.
இது குறித்து, சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனப் பொருளாதாரம் பொதுவாக சீராக இயங்குகின்றது.
உயர்தர வளர்ச்சி பயனுள்ள முறையில் முன்னேறி, அன்னிய செலாவணி கையிருப்பை மேலும் சீராக வைத்திருப்பதற்கு உறுதி அளித்துள்ளது என்றார்.