இவ்வாண்டின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணி குறித்து கருத்துகளையும் முன்மொழிவுகளையும் கேட்டறியும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி டிசம்பர் 6ஆம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி சாரா பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.
அடுத்த ஆண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகவும், 14ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கான முக்கிய ஆண்டாகவும் திகழ்கிறது. புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிய சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, நிலைத்தன்மையைப் பராமரிப்பதில் முன்னேற்றம் அடையும் பணிக் கொள்கையைக் கடைப்பிடித்து, புதிய வளர்ச்சிக் கருத்தை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்தி, புதிய வளர்ச்சிக் கட்டமைப்பின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியை உறுதியாக முன்னேற்றி, சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை பன்முகங்களிலும் ஆழமாக்கி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உயர் நிலை தற்சார்பு மற்றும் சுய வலிமையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, உள்நாட்டுத் தேவை விரிவாக்கம், வினியோக துறையின் சீர்திருத்தம், புதிய நகரமயமாக்கம், கிராமப்புற பன்முக வளர்ச்சி, உயர்தர வளர்ச்சி, உயர்நிலை பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தின் உயிராற்றலை அதிகரித்து, இடர்பாடுகளைத் தடுத்து, சமூக எதிர்பார்ப்பை மேம்படுத்தி, மக்களின் நல்வாழ்வை உயர்த்தி, சீனாவின் நவீனமயாக்கலின் மூலம் நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.