சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராவார் என்று 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வருகை தந்த ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் ஆகஸ்ட் 31ஆம் நாள் தியென்ஜின் மாநகரில் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எதிர்காலத்தை முன்னோக்கி நீண்டகால இலக்குகளை வகுக்க முடியும். அதுமட்டுமல்ல, இவ்வற்றை முன்கூட்டியே நனவாக்க முடியும். எடுத்துக்காட்டாக, 2030ஆம் ஆண்டு சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் மொத்த ஆற்றல் 120கோடி கிலோ வாட் எட்டுவதாக ஷிச்சின்பிங் முன்னதாக அறிவித்தார். இந்த இலக்கு ஏற்கனவே நனவாக்கப்பட்டது.
உறுதியற்ற தன்மை நிறைந்த உலகில், கொள்கைகளைத் தொடர்வது கடினமானது. இந்நிலையால் தொலைநோக்கு பார்வை கொண்டிருப்பது மிக முக்கியமான தன்மையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
