திருச்சியில் இருந்து இன்று காலை சார்ஜாவிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள் உள்ளே அமர்ந்திருந்த நிலையில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேரம் பணிகள் நடைபெற்றது. ஆனால் பணிகள் நிறைவடையவில்லை. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
மேலும் இன்று பகல் 12:00 மணிக்கு மாற்று விமானம் மூலம் அனைத்து பயன்களும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.